செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 27 செப்டம்பர் 2017 (12:53 IST)

பேய் கதையில் மிரட்ட வரும் நடிகை ஓவியா

`யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் காட்டேரி படத்தில் ஓவியா இணைந்து நடிக்க உள்ளார். அவருடன் இணைந்து நாயகனாக ஆதி சாய்குமார் நடிக்கிறார்.

 
டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகியாக  ஓவியாவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். விரைவில் துவங்க உள்ள இப்படத்தை டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
 
ஏற்கனவே சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ஓவியா இணைந்து `இருட்டு அறையில் முறட்டு குத்து' என்ற பேய் கதையில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்போது நடிக்கவிருக்கும் இப்படமும் காமெடி கலந்த பேய் படமாக உருவாகிறது.