ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 12 மே 2023 (17:54 IST)

திருவாரூரில் ''பர்ஹானா ''திரைப்பட காட்சிகள் ரத்து

Farhana
திருவாரூரில் பர்ஹானா திரைப்பட  காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள்  அறிவித்துள்ளன.
 
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் திரைப்படம் ’ஃபர்ஹானா.  இப்படத்தை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.

இந்த படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக கண்டனங்கள் எழுந்தன.

சமீபத்தில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு “இந்த படம் இஸ்லாமியர்கள் பயப்படும் படியாக இல்லாமல், கொண்டாடும் விதமாக இருக்கும்” எனக் கூறியிருந்தார்.

இந்த  நிலையில், பர்ஹானா திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், திருவாரூரில் இப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள்  அறிவித்துள்ளன.

படத்தை வெளியிட கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால் பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.