1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (15:09 IST)

அஜித் பட தயாரிப்பாளர் கொடிய நோயால் அவதி - அதிர்ச்சியில் கோலிவுட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் அஜித். இவர் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து டாப் நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான ராசி, முகவரி, சிட்டிசன், வாலி, ரெட், வில்லன் போன்ற பல படங்களை வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர் தான் தயாரிப்பாளர் NIC ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. 
 
இவர் பெரும்பாலும் அஜித் மற்றும் சிம்பு திரைப்படங்களை தயாரித்திருக்கிறார். இந்நிலையில் இவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உடல்நிலை மிகவும் மோசமடைந்து சிகிச்சை எடுத்துவருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த செய்தி கேட்டு ஒட்டுமொத்த கோலிவுட் திரையுலகமே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.