செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 21 ஜூலை 2021 (10:56 IST)

ஏ ஆர் ரஹ்மானை இழிவுப்படுத்திய பாலகிருஷ்ணா!

தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கியதை இழிவுப்படுத்தும் விதமாக பேசிய வீடியோ இணையத்தில் கண்டனங்களை பெற்று வருகின்றன.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரின் மகனான பாலகிருஷ்ணா தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அவரின் படங்கள் இணையத்தில் அதிகளவில் கேலிகளை சந்தித்து வருகின்றன. அவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளாக பேசி வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘யாரோ ரஹ்மானாம். ஏதோ ஆஸ்கர் விருது வாங்கியுள்ளாராம். அவரை எனக்கு தெரியாது. பாரத ரத்னா விருது கூட என் டி ஆரின் கால் தூசுக்கு சமம். எந்த விருதும் எங்கள் குடும்பம் தெலுங்கு சினிமாவுக்கு செய்த நன்மைக்கு ஈடாகாது’ எனக் கூறியுள்ளார்.

அவரின் பொறுப்பற்ற அனாவசியமான இந்த பேச்சு இணையத்தில் கண்டனங்களை சந்தித்து வருகிறது.