திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 7 அக்டோபர் 2023 (07:03 IST)

அயலான் டீசரைப் பார்த்து புகழ்ந்து தள்ளிய லோகேஷ் கனகராஜ்…!

அயலான் படத்தின் டீசர் நேற்று வெளியாகி இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. வேற்றுலகவாசியான ஏலியன், அட்டகாசமான விஷ்வல் என படம் வேறொரு லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் இந்த டீசரை பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டீசரைப் பாராட்டி X தளத்தில் “இத்தனை ஆண்டுகாலம் நீங்கள் போட்ட கடின உழைப்புக்கெல்லாம் வாழ்த்துக்கள் ரவிகுமார் அண்ணா. உங்கள் உழைப்புக்கான பலன் அதிக ஆற்றலோடு வெளிப்படுவதை என்னால் காண முடிகிறது. இவ்வளவு பெரிய பணியை நம்பியும் வழிநடத்தியும் கொண்டுவந்த சிவகார்த்திகேயன் சகோதரருக்கு நன்றிகள். இந்த குழுவினர் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

‘அயலான்’ திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கத்தில் இருந்து பல்வேறு பொருளாதார பிரச்சனைகளைத் தாண்டி இப்போதுதான் ரிலீஸ் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னர் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இப்போது மேலும் சில மாதங்கள் தள்ளி பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.