திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 6 அக்டோபர் 2023 (19:22 IST)

சிவகார்த்திகேயனின் 'அயலான்' பட டீசர் ரிலீஸ் எப்போது?

ayalan
சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும் இந்த படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பில்லை என்றும்  கிராபிக்ஸ் காட்சிகளையும் பணி அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
 

இந்த நிலையில் தற்போது இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தின் டீசரைப் பார்த்த சிலர் அதை வெகுவாகப் புகழ்ந்துள்ளதாகவும், விரைவில் டீசர் வெளியீடு  வெளியிடப்படும் என தகவல் வெளியானது.

இந்த நிலையில், அயலான் பட டீசர் வரும் அக்டோபர் 6 ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மேலும், ஏ.ஆர்.ரஹ்மான். நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார்  ஆகியோர் ஸ்டியோவில் இதற்கான பணியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.