சிறந்த இயக்குனர் பா ரஞ்சித்… சிறந்த நடிகர் விஜய் சேதுபதி –சென்னை சர்வதேச திரைப்பட விழா விருதுகள் பட்டியல்!
சென்னை சர்வதேச திரைப்பட விழா 21 ஆண்டுகளைக் கடந்து, 22 வது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. உலகம் முழுவதுமிலிருந்து தரமான பல திரைப்படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன. 1000க்கும் மேற்பட்ட திரைப்பட ஆர்வலர்கள் இவ்விழாவைப் பார்த்து ரசித்தனர்.
நேற்று விழா முடிந்த நிலையில் விருதுகள் வழங்கி கௌரவித்தனர். இந்நிலையில் சிறந்த நடிகர் விருதை மகாராஜா படத்துக்காக விஜய் சேதுபதியும், சிறந்த இயக்குனராக தங்கலான் படத்துக்காக பா ரஞ்சித்தும் பெற்றுள்ளனர். சிறந்த நடிகைக்கான விருது அமரன் படத்துக்காக சாய் பல்லவிகும் வழங்கப்பட்டது.
சிறந்த குணச்சித்திர நடிகர் விருது லப்பர் பந்து படத்துக்காக தினேஷுக்கு வழங்கப்பட்டது. சிறப்புப் பிரிவில் மக்களுக்கு பிடித்த ரசிகர் விருது மெய்யழகன் படத்துக்காக அரவிந்த் சுவாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளர் விருது அமரன் படத்துக்காக ஜி வி பிரகாஷுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த படமாக அமரன் படமும், சிறந்த இரண்டாவது படமாக லப்பர் பந்து படமும் அறிவிக்கப்பட்டன. சிறந்த பொழுதுபோக்கு படமாக வேட்டையனும், சிறந்த சமூகப் பொறுப்புத் திரைப்படமாக நந்தன் திரைப்படமும் அறிவிக்கப்பட்டன.
சிறந்த கதை - நித்திலன் சுவாமிநாதன் (மகாராஜா)
சிறந்த துணை நடிகர் - அட்டக்கத்தி தினேஷ் (லப்பர் பந்து)
சிறந்த துணை நடிகையர் - துஷாரா விஜயன் (வேட்டையன்)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - பொன்வேல் (வாழை)
நம்பிக்கைக்குரிய நடிகர் - அர்ஜுன் தாஸ் (ரசவாதி)
ஃபேவரட் நடிகர் - அரவிந்த் சுவாமி (மெய்யழகன்)
ஃபேவரட் நடிகையர் - அன்னா பென் (கொட்டுக்காளி)
ஸ்பெஷல் மென்ஷன் ஜூரி விருது - இயக்குநர் சீனு ராமசாமி (கோழிப்பண்ணை செல்லதுரை)
சிறந்த கலை இயக்குநர் - மூர்த்தி (தங்கலான்)
அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது - அருள்நிதி (ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை)
சிறந்த குறும்படம் - கயமை (பரிசுத் தொகை ரூ.10,000 -இயக்குநர் – ராஜ்குமார்)