வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2024 (09:29 IST)

விடுதலை 2 படத்தை சிறுவர்கள் பார்க்கலாமா?... சென்சார் போர்டு அளித்த சான்றிதழ்!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை 2 டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா படம் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக பின் தயாரிப்புப் பணிகள் நடந்து முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

சமீபத்தில் படத்தின் சென்சார் நடந்துள்ளது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் சில வசனங்களை நீக்க சொன்னதாகவும், ஆனால் அதற்கு இயக்குனர் வெற்றிமாறன் மறுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் படத்தை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும்.