அட்டக்கத்தி பட வாய்ப்பை இழந்தேன்… 8 வருடமாக வாய்ப்பில்லாமல் தவிக்கும் நடிகர்!
அட்டகத்தி படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்த வாய்ப்பை தான் இழந்ததாக நடிகர் பிரவீன் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்ற திரைப்படம் அட்டகத்தி. அந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் சி வி குமார், இயக்குனர் பா ரஞ்சித், நடிகர் தினேஷ் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகினர். 2012 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் புதுமுக நடிகரான பிரவீன் தானாம்.
ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு பறிபோகவே இப்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு ட்ரிப் என்ற படத்தில் சுனேனாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஒருவேளை தான் அந்த படத்தில் நடித்திருந்தால் இப்போது குறிப்பிடத்தகுந்த ஒரு நடிகராக இருந்திருப்பேன் என்ற ஆதங்கத்தில் உள்ளாராம்.