ராஜமௌலியின் ஹிட் கதையை பட்டி டிங்கரிங் செய்யும் அட்லி…அடுத்த படம் பற்றி வெளியான தகவல்!
தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் அட்லி பாலிவுட் சென்று ஜவான் என்ற பிளாக்பஸ்டர் படத்தை ஷாருக் கானுக்குக் கொடுத்தார். இதன் மூலம் இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனர் ஆகியுள்ளார். அடுத்து அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த படம் பேச்சுவார்த்தையோடு கைவிடப்பட்டது.
இதையடுத்து அவர் சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் அதற்கான திரைக்கதை வேலைகள் நடந்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படத்தில் சல்மான் கானோடு கமல்ஹாசன் அல்லது ரஜினிகாந்தை நடிக்க வைக்க அட்லி முயற்சி செய்வதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இந்த கதைப் பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் நடித்த மகதீரா திரைப்படம் போல நிகழ்காலம் மற்றும் முன் ஜென்மம் என இரு காலங்களில் நடக்கும் கதை என சொல்லப்படுகிறது.