அஜித் ரசிகர்களுடன் விவேகம் பார்க்க போறேன். அஸ்வின் ரவிச்சந்திரன்
அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களும் பார்க்க ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் இன்று அஜித் ரசிகர்களுடன் 'விவேகம்' படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அஜித் ரசிகர்களின் கரகோஷத்துடன் இந்த படத்தை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் இலங்கை சுற்றுப்பயணத்தில் அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருப்பதால் அவர் கடந்த சில நாட்களாக சென்னையில் தான் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.