திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2024 (07:24 IST)

“இது ஒரு வாய்ப்பு… அத சரியா பயன்படுத்திக்கணும்…” அசோக் செல்வன் & சாந்தணுவின் ப்ளூ ஸ்டார் டிரைலர்!

இந்நிலையில் ஜனவரி 25 ஆம் தேதி பா ரஞ்சித் தயாரித்துள்ள அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், குமரவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜெயகுமார் இயக்கியுள்ளார்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

கிரிக்கெட் விளையாடும் இரு அடித்தட்டு இளைஞர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை சொல்லும் கதையாக படம் உருவாகியுள்ளதை டிரைலர் கோடிட்டு காட்டுகிறது. எப்போதுமே விளையாட்டு சம்மந்தமான படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைக்கும் என்பதால் இந்த படமும் எதிர்பார்ப்புகளை விதைத்துள்ளது.