திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2017 (18:25 IST)

விஜேவாக ஜூலி வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

விஜய் டிவியில் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆரம்பத்தில் மக்களின் ஆதரவை  பெற்றாலும் நாளடைவில் போலி ஜூலி என்ற பெயரை பெற்றார் ஜூலி.

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 19 பிரபலங்களில் ஓவியாவுக்கு பிறகு சினிமா, சின்னத்திரை வாய்ப்புகள் ஜூலிக்கு மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது விஜே ஆகவேண்டும் என்பது  தன்னுடைய விருப்பம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இவர் தற்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் ஓடி  விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
 
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் கோகுல் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்காக ஜூலிக்கு 3 மாதத்திற்கு  மொத்தமாக 30 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதாவது மாதம் ஒன்றுக்கு தலா ரூ 10 லட்சம். இது உண்மையிலேயே ஜூலிக்கு கிடைத்துள்ல அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். இனிமேலாவது சமுத்திரகனி கூறியது போல் சிறிது காலம்  அமைதியாக இருப்பது நல்லதாக இருக்கும்.