செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (17:52 IST)

ஆர்யாவின் ‘கேப்டன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆர்யாவின் ‘கேப்டன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ஆர்யா நடிப்பில் சக்தி செளந்திரராஜன் இயக்கத்தில் உருவான கேப்டன் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கேப்டன் திரைப்படம் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் வரும் 30ஆம் தேதி ஜீ 5 ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த போஸ்டரும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆர்யா ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவில், பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.