புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 17 ஜூலை 2022 (09:50 IST)

அரவிந்த்சாமி - த்ரிஷாவின் ‘சதுரங்க வேட்டை 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

sathuranga vettai 2
அரவிந்த்சாமி - த்ரிஷாவின் ‘சதுரங்க வேட்டை 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அரவிந்த்சாமி த்ரிஷா நடித்த சதுரங்க வேட்டை 2 என்ற திரைப்படம் நீண்ட காலமாக ரிலீசாகாமல் சில பிரச்சனைகள் காரணமாக தாமதம் ஆகிக் கொண்டு வந்த.து இந்த நிலையில் ஒரு வழியாக அனைத்து பிரச்சனைகளையும் முடிக்கப்பட்டு தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
எச் வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை என்ற திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எச் வினோத் கதை வசனம் எழுத நிர்மல் குமார் என்பவர் இயக்கி வந்தார்
 
இந்த படம் ரிலீசுக்கு தயாராகி நான்கு ஆண்டுகளுக்கு மேலான நிலையில் தற்போது அக்டோபர் 7ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ள.து இதனை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர் என்பது குறிபிடத்தக்கது
 
 நடிகர், இயக்குனர் மனோபாலா இந்த படத்தை தயாரித்து உள்ளார் என்பதும் முதல் பாகத்தையும் அவர்தான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது