1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 24 டிசம்பர் 2020 (11:02 IST)

எம்.ஜி.ஆரின் Xerox ஆக மாறிய அரவிந்த் சாமி: வைரல் போட்டோஸ்!!

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி தனது எம்.ஜி.ஆர் கெட் அப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அரவிந்த் சாமி. 
 
பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘தலைவி’ என்ற படத்தில் ஜெயலலிதாவாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இப்படத்தில் எம்ஜிஆர் கெட்டப்பில் நடித்து வருகிறார் நடிகர் அரவிந்த் சாமி. 
இந்நிலையில் அரவிந்த் சாமி நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி தனது எம்.ஜி.ஆர் கெட் அப் புகைப்படங்களை வெளியிடுவதாக அறிவித்தார். அதன்படி தற்போது சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்.ஜி.ஆர் லுக்கிற்கு அரவிந்த் சாமி கணக்கச்சிதமாக பொருந்தியுள்ளதாக இணையவாசிகள் பாராட்டு மடல் வாசித்து வருகின்றனர்.