அருண் விஜய் முத்தையா படத்தை கைப்பற்றுகிறதா லைகா?
விருமன் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் முத்தையா ஆர்யாவை கதாநாயகனாக்கி இந்த படத்தை இயக்க, ஜி ஸ்டுடியோஸ் பைனான்ஸில் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் சில மாதங்களுக்கு முன்னர் ரிலீஸ் ஆனது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரிலீஸாகி மிக மோசமான வசூலைதான் பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்த இந்த திரைப்படத்தை அடுத்து இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த படத்தை இப்போது லைகா நிறுவனத்திடம் கொண்டு செல்ல இயக்குனர் முத்தையா முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அருண் விஜய் நடித்துள்ள அச்சம் என்பது இல்லையே திரைப்படத்தை லைகா நிறுவனம் வாங்கி வெளியிடப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் பல மாதங்களாக அந்த படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது.