அருண் விஜய்யின் பார்டர் திரைப்பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!
அருண் விஜய்யின் பார்டர் திரைப்படம் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் அறிவழகன் இயக்கி வரும் திரைப்படம் “பார்டர்”. இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். குற்றம் 23 படத்தை தொடர்ந்து அருண் விஜய் – அறிவழகன் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகும் படம் இந்த “பார்டர்”. இதில் அருண் விஜய் ராணுவ வீரராக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் தயாராகி பல மாதங்கள் ஆன நிலையில் கொரோனா மற்றும் வேறு சில காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
இந்நிலையில் அருண் விஜய்யின் சினம் திரைப்படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து அக்டோபர் 5 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வருடத்தில் 5 படங்கள் அருண் விஜய் நடிப்பில் வெளியாக உள்ளன.