வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (17:19 IST)

''பென்சில் ''பட இயக்குனர் மரணம்...சினிமாத் துறையினர் அதிர்ச்சி!

mani nagaraj
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் மணி நாகராஜ் இன்று திடீர் மாரடைப்பால் காலமானார். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியை ஆழ்த்தியுள்ளது.

தமிழ் சினிமாவில்  இயக்குனர் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் மணி நாகராஜ்.

இளம் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி.பிரகஷ் – ஸ்ரீதிவ்யா நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் பென்சில். இப்படத்தை இயக்குனர் மணி நாகராஜ் இயக்கியிருந்தார்.

இப்படத்திற்குப் பின், தியற்போது வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தை அவர் இயக்கி வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் ரிலிஸாகி  ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இப்படத்தில், அஜித்தின் மகளாக நடித்த அனிகா, வனிதா, லீனாகுமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று  இயக்குனர் மணி நாகராஜுக்கு திடீர் மாரடைப்பால் காலமானார்.  இவரது மரணத்திற்கு படக்குழுவினர், சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.