திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (13:49 IST)

லைகர் படத்தின் முதல் நாள் கலேக்சன் ரிபோர்ட்!

liger
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவான லைகர் என்ற திரைப்படத்தின் முதல் நாள் கலெக்சன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

தெலுங்கு சினிமாவில் முன்னணி  நடிகர் விஜய்தேவரகொண்டா. இவர் படங்களுக்கு, தென்னியாவில்  எதிர்பார்ப்பு அதிகரிப்பது வழக்கம். அதற்குக் காரணம் அவரது முந்தைய படங்களின் வெற்றி.

இந்த நிலையில்,  பூரி  ஜெகந் நாத் இயக்கத்தில், விஜய்தேவரகொண்டா நடிப்பில், சுமார் 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்தப் படம்  லைகர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில்  நேற்று வெளியானது.

மிகப்பெரிய  அளவில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.சினிமா விமர்சகர்களும் இப்படடத்திற்கு இதையே கூறி வருகின்றனர். ஆனால், விஜய்தேவரகொண்டா கடுமையாக உழைத்துப் படத்தில் நடித்திருப்பதாகப் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், லைகர் படம் ரிலீஸான முதன்  நாளில் உலகளவில் ரூ.33.12 கோடி ரூபாய் வசூலீட்டியுள்ளதாக படக்குழு அதிராகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்றுதான் இப்படம் ரிலீஸான நிலையில் கர்நாடகாவில் இப்படத்தைப் பார்க்க தியேட்டர்களில் 17% பார்வையாளர்கள்தான் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.