வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2019 (16:45 IST)

அர்ஜூன் ரெட்டி பாலிவுட் வெர்ஷன்: கபீர் சிங் டீசர் இதோ...

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் பெரிய ஹிட் ஆனதும், அதனை தமிழ் மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. 
 
தமிழில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக ஒப்பந்தமானார், ஹிந்தியில் சாகித் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழில் வர்மா என பெயரிடப்பட்டு படம் முழுவதும் முடிந்து ரிலீஸாகும் நிலையில் தயாரிப்பு தரப்பில் படம் மீதான அபிப்ராயம் நல்லதாக இல்லாத காரணத்தால் படம் கைவிடப்பட்டது. 
 
மீண்டும் இந்த படம் ஆதித்ய வர்மா என்ற பெயரில் எடுக்கப்படவுள்ளது. ஆனால், இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் டீசர் வெளியாகியுள்ளது. சாகித் கபூர், கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். 
 
இந்த படத்தின் டீசர் பார்த்த பலர் தெலுங்கு படத்தின் அர்ஜுன் ரெட்டி போலவே உள்ளதாக தெரிவித்துள்ளனர். பலர் பாராட்டியும் உள்ளனர். மேலும் இந்த படம் ஜுன் 21 ஆம் தேதி வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.