வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 16 பிப்ரவரி 2019 (11:23 IST)

புதிய 'அர்ஜூன்ரெட்டி' ரீமேக்கில் துருவ் ஜோடியாகும் பிரபல நடிகை!

தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆகிய 'அர்ஜுன்ரெட்டி' ரீமேக் படத்தை துருவ் நடிக்க இயக்குனர் பாலா 'வர்மா' என்ற டைட்டிலில் ஒரு படம் இயக்கினார். ஆனால் அந்த படம் தங்களுக்கு திருப்தி இல்லை என்பதால் அதை ரிலீஸ் செய்ய போவதில்லை என தெரிவித்த தயாரிப்பு நிறுவனம் மீண்டும் புதிய நட்சத்திரங்கள், புதிய இயக்குனருடன் இந்த படத்தை புதியதாக உருவாக்கபோவதாக அறிவித்தது

இந்த நிலையில் புதிய அர்ஜூன் ரெட்டி ரீமேக் படத்தின் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் மீண்டும் துருவ் நடிக்கவுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை பனிதா சாந்து என்ற நடிகை நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. பனிதா சாந்து கடந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'அக்டோபர்' என்ற படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

துருவ், பனிதா சாந்து நடிக்கவிருக்கும் 'அர்ஜூன் ரெட்டி' ரீமேக் படத்திற்கு புதிய டைட்டில் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இம்மாத இறுதியில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.