செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (11:27 IST)

போனிகபூர் மகன் அர்ஜுன் கபூருக்கு கொரோனா! – பாலிவுட்டில் அதிர்ச்சி!

பிரபல பாலிவுட் நடிகரும், போனிகபூரின் மகனுமாக அர்ஜுன் கபூருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்திருந்த நிலையில் தற்போது ஒமிக்ரான் காரணமாக பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மும்பையில் ஒமிக்ரான் பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பாலிவுட் பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் போனிக்கபூரின் மகனும், பிரபல இந்தி நடிகருமான அர்ஜுன் கபூருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அவர் அங்குள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.