திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (08:20 IST)

பிக்பாஸ் வின்னர் ஆரவ்வின் முதல் படத்தின் டிரைலர்!

பிக்பாஸ் முதல் சீசன் வின்னரான ஆரவ் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் ’மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது 
 
 
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பிக்பாஸ் 3ஆம் சீசனே முடிவடையவுள்ள நிலையில் தற்போது தான் முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ் நடித்த முதல் படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
ஆரவ், காவியா தபார், ராதிகா, நாசர், ரோகினி, சாயாஜி ஷிண்டே, பிரதீப், ஹரிஷ் பாண்டே, ஆதித்யா மேனன், நிகிஷா பட்டேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குனர் சரண் இயக்கியுள்ளார். இவர் அஜித் நடித்த அமர்க்களம், அட்டகாசம், அசல் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. குகன் ஒளிப்பதிவில் சைமன்கிங் இசையில் கோபிகிருஷ்ணா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சுரபி பிலிம்ஸ் நிறுவனத்தினர் தயாரித்துள்ளனர்
 
 
இது ஒரு அதிரடி ஆக்ஷன் மற்றும் ரொமான்ஸ் திரைப்படம் என்றும் இந்தப் படத்திற்கு பின்னர் கோலிவுட் திரையுலகில் ஆரவ் வெற்றி நாயகனாக வலம் வருவார் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்