1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (20:24 IST)

அரபிக்குத்து புரமோ வீடியோ: 24 மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வையாளர்கள்!

தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் இடம்பெறும் அரபிக்குத்து  பாடல் குறித்த ப்ரோமோ வீடியோ நேற்று வெளியானது என்பது தெரிந்ததே.
 
இந்தப் படம் வீடியோ வெளியாகி 24 மணி நேரத்தில் 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
 
பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன், பீஸ்ட் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் பீஸ்ட் பாடலாசிரியர் சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் உரையாடிய காமெடி உரையாடல் வீடியோ இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் யூடியூப் இணையதளத்தில் இந்த வீடியோ 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது