செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2017 (23:30 IST)

விராத்கோஹ்லி-அனுஷ்கா வரவேற்பு நிகழ்ச்சியில் மனைவியுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத்கோஹ்லி, நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் சமீபத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் சிறப்பாக நடைபெற்றது. இரு குடும்பத்தின் நெருங்கிய உறவினர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டதால் டெல்லி மற்றும் மும்பையில் உள்ள கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த விராத்-அனுஷ்கா தம்பதியினர் முடிவு செய்தனர்

இதன்படி சமீபத்தில் டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விராத்-அனுஷ்கா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்

இந்த நிலையில் மும்பையில் இரண்டாவது வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது இந்த நிகழ்ச்சியில் பிரபல பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மனைவியுடன் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மான்  மனைவியுடன் செல்லும் வெகு சில நிகழ்ச்சிகளில் ஒன்று இந்த நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.