‘அண்ணாத்த’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா உள்பட பலர் நடித்த அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே.
இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அண்ணாத்த படத்தின் டீசரை ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நாளை மாலை 6 மணிக்கு அண்ணாத்த படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் டிரைலரை வரவேற்க ரஜினி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது