செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (16:03 IST)

அண்ணாத்த ஷூட்டிங்… சில காட்சிகளை மீண்டும் படமாக்கும் படக்குழு!

அண்ணாத்த படத்தின் படமாக்கப்பட்ட காட்சிகள் சரியாக வராததால் மீண்டும் படம்பிடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் பெரும்பகுதி காட்சிகளை நடித்து முடித்துள்ளார். 70 வயதாகிவிட்ட அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள் சினிமாவில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அண்ணாத்த திரைப்படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவுக்கு சிகிச்சை சென்றுள்ள ரஜினி, இந்தியா திரும்பியதும் தனது அடுத்த படத்துக்கான முடிவை எடுக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தை எடுத்த வரையில் போட்டுப்பார்த்ததில் சில காட்சிகள் படக்குழுவினருக்கு திருப்தி அளிக்கவில்லை. அதனால் இப்போது நடக்கும் ஷூட்டிங்கில் அந்த காட்சிகளை மட்டும் மீண்டும் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.