ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:05 IST)

செம கியூட்மா... அழகிய உடையில் அசரடிக்கும் அஞ்சனா!

பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி அஞ்சனா தனியார் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து பிரபலமானவர். தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்த இவர் 'கயல்' படத்தின் ஹீரோவான சந்திரனை திருமணம் செய்து கொண்டு ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகினார்.
 
மகன் ருத்ராக்ஸ் பிறந்த பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலிருந்து சற்று ஓய்வு எடுத்திருந்த அவர் தற்போது மீண்டும் களத்தில் இறங்கவுள்ளார். தற்போது இவர் புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் மற்றும் ஜீ தமிழ்,கலர்ஸ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார்.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே அழகாய் மாறி புகைப்படங்களை வெளியிட்டு வெளியிட்டு வரும் அஞ்சனா தற்போது சிகப்பு நிற அழகிய கௌன் உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வசீகரித்துள்ளார்.