ஆர் ஆர் ஆர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்- அனிருத் குரலில் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரிலீஸ்!
ஆர் ஆர் ஆர் படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.
தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.
ஆகஸ்ட் 1 ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஐந்து மொழிகளில் ரிலிஸாக உள்ளது. இந்த பாடலின் தமிழ் வடிவத்தை மதன் கார்க்கி எழுத அனிருத் பாடியுள்ளார்.