வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 10 மே 2019 (07:05 IST)

'தெறி' ஃபர்ஸ்ட்லுக்கின் காப்பியா 'ஏஞ்சலினா'

சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏஞ்சலினா' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று மாலை வெளியானது. 'பதில் சொல்ல வருகிறாள்' என்ற தலைப்பில் வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை ரசிகர்கள் ரசித்து வந்த நிலையில் இந்த ஃபர்ஸ்ட்லுக் விஜய் நடித்த 'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கின் காப்பி என விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.

தெறி படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் மூன்று விதமான விஜய் கெட்டப் இருக்கும். அதில் ஒரு விஜய்யின் வாயை இன்னொரு விஜய்யின் கை அழுத்தியிருப்பதை போன்ற லுக் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.

இந்த நிலையில் இதேபோல் தான் 'ஏஞ்சலினா' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கும் நாயகியின் மூன்று தோற்றங்கள், ஒரு நாயகியின் வாயை கை அழுத்தியிருப்பதை போன்று உள்ளது. இதனையடுத்தே விஜய் ரசிகர்கள் 'தெறி' படத்தின் காப்பியே ஏஞ்சலினா போஸ்டர் என பதிவு செய்து வருகின்றனர். இதற்கு படக்குழுவினர்கள் தரப்பில் இருந்தோ, அல்லது சுசீந்திரனின் தரப்பில் இருந்தோ இன்னும் எந்தவிதமான பதிலும் விளக்கமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது