செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 பிப்ரவரி 2021 (17:29 IST)

கெஸ்ட் ரோல்னு யாரும் வராதீங்க… கடுப்பாகும் ஆண்ட்ரியா!

நடிகை ஆண்ட்ரியா தனது திறமைக்கு ஏற்ற வேடங்கள் வருவதில்லை என்று ஆதங்கத்தில் உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. ஆனால் அவரது திறமைக்கு ஏற்ற வேடங்கள் வருவது வெகு சொற்பமாகவே உள்ளது. தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் ஊறுகாய் வேடமே கொடுக்கின்றனர் என்ற வருத்தத்தில் உள்ளாராம்.

சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கூட அவருக்கு துக்கடா வேடமே கொடுக்கப்பட்டது. இதனால் இனிமேல் முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்துள்ளாராம். மேலும் யாராவது கெஸ்ட் ரோல் என வந்தால் அவர்களிடம் நோ சொல்லி அனுப்பி விடுகிறாராம்.