1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 14 மார்ச் 2018 (15:06 IST)

நிர்வாணமாக கூட நடிப்பேன்....ஆண்ட்ரியா அதிரடி முடிவு

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க தயார் என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.

 
இந்திய சினிமாவில் பெரும்பாலான பாலிவுட் நடிகைகள் டாப் லெஸாக நடித்துள்ளனர். தென் இந்திய சினிமா நடிகைகளும் தற்போது இதுபோன்று நடிக்க முன்வந்துள்ளனர். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.
 
வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் ஆண்ட்ரியாவுக்கு தரமணி திரைப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆண்ட்ரியா கூறியதாவது:-
 
சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. தரமணி படத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தாலும் அதன் பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பது ஒருபோதும் எனக்கு மகிழ்ச்சியை தராது. 
 
நிர்வாணமாகக் கூட நடிக்க தயாராக இருக்கிறேன். ஆனால் படத்தில் அந்த காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.