திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 11 மே 2020 (16:49 IST)

மைக் அவங்ககிட்ட கொடுங்கன்னு சொன்ன கையில இப்படி கழுவ வச்சுட்டாங்களே குருநாதா...!

விஜய் டிவியில் ஒளிபரப்பான நீயா? நானா? நிகழ்ச்சியின் மொத்த அரங்கத்தையும் தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஆளுமைத் திறனுக்கு சொந்தக்காரர் கோபிநாத். எந்த ஒரு கருத்தையும் ஆணித்தரமாக முன்வைத்து, சொல்ல வேண்டிய விசயத்தை, தெளிவாக சொல்லி மக்களிடம் கொண்டு சேர்த்து பெரும் பிரபலமானார்.

கேட்பவர்களுக்கு சற்றும் ஆர்வம் குறையாமல் விவாதிக்கும் இவரது பேச்சு திறமைக்கென்றே வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறாரகள். அவ்வளவு என் பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் எனப் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாகத் திகழ்பவர் ஆங்கர் கோபிநாத். ஒரு ஆங்கராக மட்டும் சிறந்து விளங்காமல் பத்திரிக்கையாளர், ரிப்போர்டர், நியூஸ் வாசிப்பவர், எழுத்தாளர் என்று பல திறமைகளை தன்னுள் கொண்டு ஜாம்பவானாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் நிகழ்ச்சிகள் ஏதுமின்றி வீட்டில் இருந்து வரும் கோபிநாத் அவர்கள் மனைவிக்கு உதவியாக பாத்திரம் கழுவுகிறார். இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட கோபிநாத்தை அனைவரும் பாராட்டி வருவதுடன் எப்படி இருந்த என் தலைவனை இப்படி ஆகிட்டாங்களே என கமெண்ட்ஸ்  கிண்டலடித்து வருகின்றனர்.