ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2019 (14:50 IST)

பில் கட்ட பணமில்லை: நட்சத்திர விடுதியிலிருந்து எஸ்கேப் ஆன பிரபல நடிகை

நடிகை பூஜா காந்தி 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கிவிட்டு, அதற்கான பில்லை கட்டாமல் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
 
நடிகை பூஜா காந்தி தமிழில் கொக்கி படம் மூலம் அறிமுகமாகி வைத்தீஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாள திரையுலகிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
 
இந்நிலையில் பூஜா பெங்களூருவில் உள்ள 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்ததாக தெரிகிறது. ஆனால் ஹோட்டல் பில் 4.5 லட்சத்தை கட்டாமல் அங்கிருந்து நைசாக தப்பியுள்ளார். இதுகுறித்து ஹோட்டல் நிர்வாக அளித்த புகாரின்பேரில் போலீஸார் பூஜாவிடம் விசாரித்தனர்.
 
இதையடுத்து பூஜா ஹோட்டல் நிர்வாகத்திற்கு பாதி பணத்தை செலுத்தியுள்ளார். பட வாய்ப்பு இல்லாததால் மீதி பணத்தை பிறகு தருகிறேன் என கூறியுள்ளார் அவர். இச்சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.