செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (10:55 IST)

அத செய்ய சொல்றீங்களா!!! நோ சான்ஸ்... இயக்குனரிடம் பொங்கிய நடிகை ரம்யா

அடிவாங்கும் காட்சிகளில் எல்லாம் நடிக்க முடியாது என நடிகை ரம்யா கட் அண்ட் ரைட்டாக கூறியுள்ளார்.
 
தமிழ், கன்னடத்தில் பிரபலமான நடிகை ரம்யா. இவர் சிம்புவின் குத்து படத்தின் அறிமுகம் ஆனதால் இவரை எல்லோரும் 'குத்து ரம்யா' என அழைத்தார்கள். பின்னர் வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். பின்னர் காங்கிரஸ் எம்.பியாகவும் பதவி வகித்தார். இதனால் அவர் படங்களில் நடிப்பதை தவிர்த்து அரசியலில் ஈடுபட்டு வந்தார்.
 
இந்நிலையில் அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கேரக்டர்களில் நடிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி ஒரு படத்தில் நடிக்க ரம்யா ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ஹீரோ ரம்யாவை அடிப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட இருந்தது. இதனால் டென்ஷனான ரம்யா, என்னை யாருன்னு நெனச்சீங்க, இந்த காட்சியில் எல்லாம் நடிக்க முடியாது. அதற்கு வேற ஆளை பாருங்கள் என இயக்குனரிடம் கோபமாக கூறியிருக்கிறார்.