செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (12:00 IST)

ஏமி ஜாக்சனுக்கு முடிஞ்சது நிச்சயதார்த்தம்! இவருதாங்க அந்த மாப்பிள்ளை

கடந்த வருடம் பாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் உள்பட பல நடிகைகள் திருமணம் செய்தனர். இந்த விஷயங்கள் தான் பாலிவுட்டில் ஹாட் டாபிக்காக இருந்தது.  


 
இந்நிலையில்  நேற்று புத்தாண்டு பிறந்த நிலையில், நேற்று நடிகை எமி ஜாக்சன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக தெரிவித்தார். 
 
பெரிய வைர மோதிரம் கையில் அணிந்து இருந்த எமி ஜாக்சன், தன் காதலர் ஜார்ஜ் பனயுட்டாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஜார்ஜ் பெரும் தொழிலதிபராவார். இவர்களது நிச்சயதார்த்தம் ஜாம்பியா நாட்டில் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.