அமிதாப்பச்சன் - எஸ்.ஜே.சூர்யா இணையும் முதல் படம்
இந்திய சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் முதல் பட அறிவிப்பு சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
'உயர்ந்த மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை திருச்செந்தூர் முருகன் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தா.தமிழ்வாணன் என்பவர் இந்த படத்தை இயக்கவுள்ளார்.
அமிதாப்பச்சன் நடிக்கும் முதல் தமிழ்ப்படமான இந்த படம் இந்தியிலும் உருவாகவுள்ளது. இந்த படத்தில் மேலும் சில முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது.