திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 ஆகஸ்ட் 2018 (19:35 IST)

135 சைபர் குற்றங்களில் ஈடுபட்ட 27வயது இளைஞர் கைது

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்களை திருடி பலரை ஏமாற்றிய 27வயது இளைஞர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

 
டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் விகாஸ் ஜா என்ற இளைஞர், பெண் ஒருவரின் கிரேடிட் கார்டு தகவல்களை திருடி ரூ.50 ஆயிரம் ஏமாற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
 
பின்னர் ஜாமினில் வெளிவந்த விகாஸ் தொடர்ந்து சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார். விகாஸ் மேல் சைபர் கிரைம் குற்றம் பிரிவின் கீழ் 135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
சோதனை நடத்திய காவல்துறையினர் விகாஸிடம் இருந்து செல்போன்கள், ஒரு டெபிட் கார்டு, சிம் கார்டுகள் மற்றும் ரூ.17.70 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர். 
 
மின்னஞ்சல் முகவரி மூலம் வங்கி கணக்கில் மொபைல் எண்ணையும் மாற்றியுள்ளார். இதனால் அவர்களது கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்யும் போது தொடர்புடையவர்களுக்கு ஓடிபி எண் செல்லாது. இதனால் பணம் திருடப்படும் விவரம் அவர்களுக்கே தெரியாது.
 
இந்நிலையில் அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.