1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 29 ஜூலை 2024 (09:01 IST)

விஜய் அழைத்தால் அவர் கட்சியில் சேரத் தயார்… பிரபல இயக்குனர் ஓபன் டாக்!

இயக்குனர் அமீர் தன்னுடைய காத்திரமான படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார். மேலும் நடிகராகவும் நடித்து வரும் அவர் வடசென்னை படத்தின் மூலம் ரசிகர்களை பெற்றார். இப்போது அவர் நடித்துள்ள மாயவலை ரிலீஸுக்கு தயாராக உள்ளது.

அடுத்து வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கிடையில் போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவராக சொல்லப்படும் ஜாஃபர் சாதிக்கும் அமீருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது சம்மந்தமான அவர் விசாரணைக்கும் ஆஜராகி, தன் மேல் எந்த தவறும் இல்லை என கூறி வருகிறார்.

ஆனாலும் தொடர்ந்து அவரை இந்த விஷயத்தில் சம்மந்தப்படுத்தி அவ்வப்போது தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். அதில் “தற்போதுள்ள அழுத்தங்களை பார்க்கும் போது அரசியலுக்கு வரலாம் என்றுதான் நினைக்கிறேன். விஜய் என்னை அழைத்தால் அவர் கட்சியில் சேரத் தயாராக இருக்கிறேன்.  விஜய்யும் சீமானும் இணைந்து பணியாற்றினால் மகிழ்ச்சி” எனக் கூறியுள்ளார்.