வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (15:43 IST)

அனைத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களும் அமேசானில்… ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!

ஜேம்ஸ் பாண்ட் படங்களை எந்த ஓடிடி தளங்களுக்கும் கொடுக்க மாட்டோம் என பிடிவாதமாக இருந்தது எம் ஜி எம் நிறுவனம்.

உலகப் புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களின் உரிமைகள் அனைத்தும் எம் ஜி எம் நிறுவனம் வசம் இருந்தது. ஆனால் எந்த ஓடிடி தளங்களுக்கும் அதன் உரிமைகளை கொடுக்க மாட்டோம் என பிடிவாதமாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு எம்ஜிஎம் நிறுவனத்தை அமேசான் நிறுவனம் பெரும் தொகைக்கு கைப்பற்றியதாக செய்திகள் வெளியாகின.

அதையடுத்து இப்போது எம்ஜிஎம் கைவசம் இருந்த 25 ஜேம்ஸ்பாண்ட் படங்களில் கடைசியாக வெளியான நோ டைம் டு டை தவிர மற்ற எல்லா ஜேம்ஸ் பாண்ட் படங்களையும் இனி அமேசான் ப்ரைமில் காணலாம். அதுமட்டுமில்லாமல் மேலும் 4000 படங்களும் ப்ரைம் வீடியோ வசம் வந்துள்ளது. இந்த செய்தி ஜேம்ஸ் பாண்ட் பட ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.