ஆல்யா மானசாவின் முத்த வீடியோ: இணையத்தில் வைரல்
ஆல்யா மானசாவின் முத்த வீடியோ:
பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆல்யா மானசா பல தொலைக்காட்சி சீரியல்களிலும் ஒருசில திரைப்படங்களிலும் நடித்து இருந்தாலும் அவருக்கு உலகம் முழுவதும் புகழை பெற்று தந்த தொடர் என்றால் அது ’ராஜா ராணி’ என்று சொல்லலாம். அந்த தொடரில் ’சின்னய்யா’ என்று அவர் காதல் மொழி பேசுவது அனைவரையும் கவர்ந்தது
இந்த நிலையில் ராஜா ராணி தொடரின் ஹீரோவான சஞ்சிவ் கார்த்திக்கை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஆல்யா மானசா சமீபத்தில் கர்ப்பம் ஆனார் என்பதும் அவருக்கு அழகான பெண் குழந்தை கடந்த சமீபத்தில் பிறந்தது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஆல்யா மானசா தனது குழந்தையின் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இந்த பதிவுகள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைக்கு முத்தம் கொடுப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.அம்மாவின் முத்தத்திற்கு அந்த குழந்தை கொடுத்த ரியாக்சனை பார்ப்பது கொள்ளை அழகாக உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர் இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது