நடன வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாவை ரொப்பும் ஆல்யா மானசா!
நடன வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் ஆல்யா மானசா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர்.
பின்னர் இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டு கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள். அவ்வப்போது மகள் ஐலாவின் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆல்யா மானசா தற்ப்போது ராஜா ராணி 3 சீரியல் செட்டில் டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.