புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 27 ஜூன் 2022 (11:03 IST)

கர்ப்பமானதை அறிவித்த பாலிவுட் நடிகை ஆலியா பட் … ரசிகர்கள் வாழ்த்து!

பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இவர் வலம் வருகிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான மகேஷ் பட்டின் மகளும், முன்னணி நடிகையுமாவார் ஆலியா பட். இவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து இப்போது ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதை அறிவித்துள்ளார்.  மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர் “எங்கள் குழந்தை விரைவில் வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்துவருகின்றனர்.