அமீர்கான் படத்தோடு மோதும் பாலிவுட் நடிகர்…. ‘ரக்ஷா பந்தன்’ வெளியீடு அறிவிப்பு!
1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது. இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதே நாளில் தற்போது மற்றொரு பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் நடிக்கும் ரக்ஷா பந்தன் திரைப்படமும் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரு முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸாவதால் பாலிவுட் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.