திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 மே 2022 (11:09 IST)

காத்திருப்பு முடிந்தது… வெளியானது அமீர்கானின் ‘லால் சிங் சட்டா’ டிரைலர்!

அமீர் கான் நடித்துள்ள லால் சிங் சட்டா திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

1994 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படம் ஆஸ்கர்களை அள்ளியது. அதுமட்டுமில்லாமல் இன்று வரை உலக சினிமா ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பெற்றுள்ள படமாக உள்ளது.  இந்த படத்திஅ 25 ஆண்டுகள் கழித்து பாலிவுட் நடிகர் அமீர்கான் லால் சிங் சட்டா எனும் பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. லால் சிங் சத்தா திரைப்படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் 11 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு இடையே லால் சிங் சட்டா படத்தின் டிரைலர் வெளியானது. பீல்குட் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.