விடாமுயற்சி ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு… இந்த தீபாவளி அஜித் vs சூர்யாவா?
அஜித் இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக லைகா நிறுவனத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதனால் அஜித் ஆதிக் இயக்கும் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்நிலையில் இப்போது விடாமுயற்சி ஷூட்டிங் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ஜூன் 20 ஆம் தேதி படக்குழு அஜர்பைஜானுக்கு செல்ல உள்ள நிலையில் அஜித், திரிஷா மற்றும் ரெஜினா சம்மந்தப்பட்ட காட்சிகளை அங்கு படமாக்க உள்ளார்களாம்.
இதையடுத்து படத்தை விறுவிறுவென முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தீபாவளிக்கு சூர்யாவின் கங்குவா திரைப்படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இது தவிர கவினின் கிஸ் மற்றும் பிரதீப்பின் எல்ஐசி ஆகிய படங்களும் தீபாவளியைக் குறிவைத்து தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.