செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 1 மே 2023 (15:01 IST)

V செண்டிமெண்ட்டுக்காக இப்படி ஒரு டைட்டிலா?... இணையத்தில் ட்ரோல் ஆகும் விடா முயற்சி!

துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் அவரின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டு மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான வேலைகளை மகிழ் திருமேனி இப்போது செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு படத்தின் டைட்டில் ‘விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டு படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாகவும், அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியாகியுள்ள போஸ்டர் இணையத்தில் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்து அவர்களை திக்குமுக்காட செய்துள்ளது. 

ஆனால் ஒரு சில ரசிகர்களுக்கு இந்த விடாமுயற்சி டைட்டில் பிடிக்கவில்லை. வி செண்ட்டிமெண்ட்டுக்காக இப்படி எல்லாமா டைட்டில் வைப்பது என்று சலித்துக் கொள்கின்றன. ஆரம்ப காலத்தில் அஜித்துக்கு V எழுத்தில் தொடங்கும் படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. அதைக் காரணம் காட்டி, சமீபகாலம் வரை V எழுத்தில் தொடங்குவது பொல டைட்டிலை வைத்து வருகின்றனர். அதில் பல டைட்டில்கள் படத்தின் கதைக்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாதவையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.