அஜீத்-சிவா கூட்டணியில் அடுத்த படம் ‘விஸ்வாசம்’ - தலைப்பு அறிவிப்பு
நடிகர் அஜீத் மற்றும் இயக்குனர் சிவா கூட்டணி மீண்டும் இணையும் புதிய படத்திற்கு விசுவாசம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து அஜீத்தின் அடுத்த படத்தையும் இயக்குனர் சிவாவே இயக்குகிறார். இப்படத்தையும், சத்யஜோதி பிலிம் நிறுவனமே தயாரிக்கிறது.
ஆனால், அப்படத்தின் தலைப்பு இதுவரை வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில், அஜீத் - சிவா கூட்டணிக்கு வழக்கமாக வைக்கப்படும் ‘ வி’ எழுத்து செண்டிமெண்டிலேயே இப்படத்தின் தலைப்பும் ‘விஸ்வாசம்’ என வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த அறிவிப்பை சத்யஜோதி பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வமான டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.