செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (19:44 IST)

மாற்றுத்திறனாளி சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ராகவா லாரன்ஸ்

நடிகர், இயக்குனர் ராகவா லாரன்ஸ் குழந்தைகளுக்கு உதவுவதில் பெரும் விருப்பம் கொண்டவர். குறிப்பாக மாற்றுத்திறனாளி சிறுவர், சிறுமிகளுக்கு அவர் பல உதவிகள் செய்துள்ளார்.





இந்த நிலையில் அஜித் என்ற மாற்றுத்திறனாளி சிறுவன் ராகவா லாரன்ஸின் தீவிர ரசிகர் என்றும், அவர் ராகவா லாரன்ஸை சந்திக்க விரும்புவதாகவும் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் கேள்விப்பட்டார்.

உடனடியாக அந்த சிறுவனை அழைத்து வர ஏற்பாடு செய்த ராகவா லாரன்ஸ், அந்த சிறுவனிடம் சில நிமிடங்கள் உரையாடி பின்னர் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருவது மட்டுமின்றி ராகவாவுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.